இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
Governance

தேர்தல் பத்திரங்கள்: மோடி அரசாங்கம் ரிசர்வ் வங்கியை நிராகரித்தது

மோடி அரசாங்கம் இந்திய அரசியலுக்குள் மூலாதாரமற்ற நிதியை எப்படிக் கொண்டு வந்தது என்பது பற்றிய புலனாய்வு

Nitin Sethi

Nitin Sethi

அரசியல் கட்சிகளுக்கு ரகசிய வழியில் நிதியை மாற்றும் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கு சில தினங்கள் முன்பாக மோடி அரசாங்கம் நாட்டின் மத்திய வங்கியின் கருத்தைக் கேட்பது போல் நடித்தது.

ஆனால் அதன் தயக்கங்களை முழுவதுமாக நிராகரித்தது என்பதை பெறப்பட்ட வெளியிடப் படாத ஆவணங்கள் உறுதி செய்கின்றன.

அவற்றின் அடிப்படையில் மத்திய வங்கியின் ஆட்சேபணைகளுக்கு எதிராக அரசாங்கத்தால் இந்த விஷயத்தில் காட்டப்பட்ட அவசரம் எத்தனை தீவிரமானது என்பது தெரிய வருகிறது.

இதுவரை, மார்ச் 2018 வரை, ரூபாய் 6000 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் புள்ளி விவரப்படி முதல் பகுதியான ரூபாய் 222 கோடியில் 95% விழுக்காடு பா.ஜ.க .-யால் பெறப் பட்டுள்ளது.

நிதி அறிக்கை வெளியிடப்படுவதுற்கு நான்கு நாட்களுக்கு முன்னால், ஒரு சனிக்கிழமை , ஒரு மூத்த வருமானத்துறை அதிகாரி, பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரின் நிதி அறிக்கை வெளியீட்டில் இது சம்பந்தமான ஒரு பிரச்சனை இருப்பதைக் கவனித்தார்.

இந்தியாவின் அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெயிட்லி 2017 பிப்ரவரி 01 தேதியன்று தனது உரையில் , நாட்டின் பெரிய நிறுவனங்களையும் மற்ற அனுமதிக்கப்பட்ட அமைப்புக்களையும் அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய முறையில் வரம்பின்றி பணம் அனுப்ப வழி செய்யும், சர்ச்சைக்குரிய ஆனால் சட்டப்படி அனுமதிக்கப் பட்ட தேர்தல் பத்திரங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிருந்தார்.

சட்டப்படி எழுதப்பட்டால் இந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரங்கள் பெரிய நிறுவன்ங்களின் செல்வாக்கை சட்டத்தின் அனுமதிக்குட்படுத்தி வெளிநாட்டு பணம் இந்திய அரசியலுக்குள் கொண்டு வர சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்.

ஆனால் அதில் ஒரு தடை இருந்தது. மத்திய வங்கியின் ஒப்புதல் பெறப் பட வேண்டும்.

அந்த அதிகாரி, நிதித் துறையிலிருந்த தனது மூத்த அதிகாரிகளுக்கு இந்த நிதிக் கொடைகளை சட்டப்படி அனுமதிக்க இந்திய மத்திய வங்கி அமைப்புச் சட்டப்படி திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பற்றி ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார்.

நிதி அமைச்சரின் அனுமதிக்காக, தனது மூத்த அதிகாரிகள் வழியாக ஒரு வரைவு தயாரித்து அனுப்பினார்.

அதே தினம், மதியம் 1.45 அளவில் நிதி அமைச்சகத்தின் ஒரு அதிகாரிஅந்த நேரத்தில் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு அடுத்த நிலையில் உதவி ஆளுநராக இருந்த ராம சுப்பிரமணியனுக்கு முன்மொழியப் பட்ட திருத்த்திற்கு “விரைவான கருத்து கோரப் படுகிறது“ என்று ஐந்து வரிகளில் அசிரத்தையான ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

ஜனவரி 30, 2017 அன்று ரிசர்வ் வங்கியின் தெளிவான எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில் பெறப் பட்டது. தேர்தல் பத்திரங்களும் அதற்கான சட்ட சீர்திருத்தங்களும் பண மோசடிக்கும் இந்திய வங்கி பணத்தின் மதிப்பிழப்பிற்கும் காரணமான ஒரு முன்னுதாரணமாக அமையும், அதோடு மத்திய வங்கி சட்டத்திட்டத்தின் மூலாதார குறிக்கோளையும் சிதைத்து விடும் என்று ரிசர்வு வங்கி தெரிவித்தது.

தேர்தல் பத்திரங்கள்: மோடி அரசாங்கம் ரிசர்வ் வங்கியை நிராகரித்தது
தேர்தல் பத்திரங்கள்: மோடி அரசாங்கம் ரிசர்வ் வங்கியை நிராகரித்தது

தேர்தல் பத்திரங்கள் பேரர் பாண்ட் (bearer bond) எனப்படும் ஆபத்தான, தெளிவற்ற தாங்கிப் பத்திரங்களாக மட்டுமே இருக்க முடியும், அதோடு அவற்றின் உரிமையாளர் பற்றிய எந்த விவரத்தையும் கொடுக்காது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

தவிரவும் இந்தத் பேரர் பாண்ட்-கள் கரன்சிக்கு சமமாக மாறும் சக்தி கொண்டவை என்பதால் ரிசர்வ் வங்கி வெளியிடும் வங்கி நோட்டுக்களின் மீதான நம்பிக்கையிழப்புக்கும் வழி வகுக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்த்து, அவை பேரர் பாண்ட்-கள் என்பதால் பரிமாற்றப் படக்கூடியவை.

அதனால் இறுதியாக யாரால் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப் பட்டது என்பதும் தெரிய வராது என்பதும் தெளிவாக சொல்லப் பட்டது.

சாதாரணமாக, ரிசர்வ் வங்கியின் இத்தகைய தீவிரமான எதிர்ப்பு எந்த நிர்வாக முறையிலும் தாமதத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

வழக்கமாக எந்த அரசாங்கமும் மந்திரி சபைகள் மற்றும் முன் மொழியப் பட்ட மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய மற்றும் அது பற்றி சில கருத்துக்கள் கொண்ட பிற அரசாங்க அமைப்புகளுடன் ஆலோசனை செய்த பிறகே சட்டத்தில் மாறுதல்கள் செய்யும்.

ஆனால் தேர்தல் பத்திரங்கள் விஷயத்தில் மோடி அரசாங்கத்தில் ஆற்றல் மிக்க அமைப்புகள் ஏற்கெனவே ஒரு மனதான முடிவை வைத்திருந்தன.

மோடியின் அரசாங்கம் தேர்தல் பத்திரங்கள் பற்றிய இந்திய தேர்தல் கமிஷனின் கருத்தினைப் பற்றி எவ்விதமான பொய்கள் சொன்னார்கள் என்று பார்க்கலாம்.

அந்த நேரத்தில் வருமான செயலராக இருந்த ஹஸ்முக் ஆதியா இந்தியாவின் மத்திய வங்கியின் கடிதம் வந்த அதே தினத்தில் ஒரே ஒரு சிறிய விளக்கத்துடன் ரிசர்வ் வங்கியின் அத்தனை கவலைக்குரிய கேள்விகளையும் நிராகரித்தார்.

விளக்கத்துடன் ரிசர்வ் வங்கியின் அத்தனை கவலைக்குரிய கேள்விகளையும் நிராகரித்தார்.

வணிக நிர்வாக மந்திரி சபையின் செயலாளராக இருந்த தபன் ராய்க்கும், நிதி அமைச்சர் ஜெயிட்லிக்கும் எழுதிய குறிப்பு இந்த விதமாக ஆரம்பித்தது, “கொடையாளரின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருந்து அதே சமயம் அந்த தொகை முழுவதுமாக வரி செலுத்தப் பட்ட தொகையிலிருந்தே செய்யப் படுகிறது என்று உறுதி செய்யும் முன் மொழியப் பட்ட ப்ரீ பெய்ட் பணக் கருவிகளைப் பற்றி ரிசர்வ் வங்கி புரிந்து கொள்ளவேயில்லை என்று எனக்குத் தோன்றுகிறது”.

அவரது குறிப்பு ரிசர்வ் வங்கியின் கவலைகளுக்கு எதிரான தேவையான வாதங்களை முன் வைப்பதற்குப் பதிலாக அரசாங்கம் ரிசர்வ் வங்கியின் பின்னூட்டங்களை முக்கியமாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப் படுத்துவதாக அமைந்தது.

ரிசர்வ் வங்கியின் கருத்துக் கேட்கப்பட்டதிலிருந்து உள்ள முதல் வேலை நாளிலேயே ரிசர்வ் வங்கி பதில் அளித்திருந்த போதும், அதன் அறிவுரை வெகு தாமதமாக, நிதி மசோதா ப்ரிண்ட் செய்யப்பட்ட பிறகே வந்ததாகவும் ஆதியா குறிப்பிட்டிருந்தார்.

அதே நாளில் அவரது சக அதிகாரி தபன் ராயின் சம்மதம் பெறப்பட்டது. அந்தக் கோப்பு மின்னல் வேகத்தில் நகர்த்தப் பட்டு நிதி அமைச்சர் ஜெயிட்லியின் கையொப்பம் பெறப்பட்டது.

தேர்தல் பத்திரங்கள்: மோடி அரசாங்கம் ரிசர்வ் வங்கியை நிராகரித்தது

இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 01 தேதியன்று அரசியல் பண முதலீட்டு அமைப்பை சுத்தம் செய்யவும், அதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும் ஒரு முறையாக தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை முன் வைக்கவும் ரிசர்வ் வங்கி சீர் திருத்தச் சட்டம் கொண்டு வரவும் ஜெயிட்லி பரிந்துரைத்தார். அடுத்த மாதம் அந்த திட்டங்கள் 2017 சட்ட மசோதாவுடன் சட்டமாக்கப்பட்டன.

வெளிப் பார்வைக்கு தீங்கற்றதாகத் தோன்றிய ரிசர்வ் வங்கி சீர்திருத்தமும் மற்ற மாற்றங்களும் ஆலொசனைகளுக்குக் காத்திராமல் செய்யப்பட்டது.

இந்திய அரசியல் கட்சிகளுக்கு, முக்கியமாக பாரதீய ஜனதா பார்ட்டிக்கு எதிர் பாராமல் கிடைத்த புதையலாக அமைந்தது. அதற்கு முன்பாக இந்திய நிறுவனங்கள் தங்கள் ஆண்டு அறிக்கையில் அரசியல் கட்சிகளுக்கு அளித்த தொகையில் தெரிவிக்க வேண்டியிருந்தது தவிர கடந்த மூன்றாண்டு சராசரி லாபத்தில் 7.5% க்கு மேல் கொடுக்கவும் தடையிருந்தது.

அதோடு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கவும் தடையிருந்தது.

பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மாற்றங்கள் இவையனைத்தையும் மாற்றியது.

அரசியல் கட்சிகளுக்கு நிதி மாற்றம் செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யாத ஷெல் கம்பெனிகளும் (shell companies) மற்ற இந்திய நிறுவன்ங்களும், தனி நபர்களும், டிரஸ்ட் போன்ற சட்டத்திற்குட்பட்ட அமைப்புகளும் அநாமதேய முறையில் வரம்பற்ற தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி அதை அரசியல் கட்சிகளுக்கு மாற்றி பணம் பெற முடிந்தது.

வெளிநாட்டு நிறுவனங்களும் இப்பொது அரசியல் கட்சிகளுக்கு எளிதாக பணமாற்றம் செய்ய முடிந்தது.

உச்ச நீதி மன்றம் இந்த திட்டத்தின் செல்லுபடித் தன்மையை பற்றி சிந்திக்கும் இந்த நேரத்தில் வெளிப்படைத்தன்மை செயல் முனைவர் லோகேஷ் பாத்ராவின் கூற்றுப் படி மோடி அரசாங்கத்தின் இந்தியர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு கம்பெனிகளும் அரசியல் கட்சிகளுக்கு நிதி மாற்றம் செய்யக் கூடிய சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளின் அவசரமான தேடலில், நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதுகாவலாக விளங்கும் ரிசர்வ் வங்கி தவறான வழிகாட்டலுக்குள்ளாக்கப் பட்டும் அலட்சியப் படுத்தப் பட்டும் பாதிக்கப் பட்டும் உள்ளது.

அரசியல் பத்திரங்கள் பற்றிய ரிசர்வ் வங்கியின் ஆரம்ப கால ஆட்சேபணைகளை அலட்சியப் படுத்தியது மட்டுமல்லாமல் அந்த திட்டத்தை மோசடிக்கு இலக்காகாமல் தடுப்பதற்கும் இந்திய கரன்சியின் உறுதித் தன்மையைக் காக்கவும் தரப்பட்டதொடர்ந்த ஆலோசனைகளையும் மறுதளித்தது.

நிதி அமைச்சகம் அடுத்த ஆண்டுக்கான நிதி அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடு பட்டிருப்பதால் கேள்விகளுக்கு பதில் தர இயலவில்லையென்றும் ஆனால் எல்லா முடிவுகளும் நல்ல நம்பிக்கையிம் பேரில் எடுக்கப் பட்டதாக உறுதி அளிப்பதாகவும் கூறியது.

“இந்த மின்ன்ஞ்சலில் குறிப்பிடப்பட்ட எல்லா விஷயங்களும் அந்த நேரத்திய திறமையான அதிகாரிகளால் எடுக்கப் பட்டது. பொது நலம் கருதியும் முழு நம்பிக்கையோடும் எடுக்கப் பட்டுள்ளன. தீர்மானங்கள் எடுக்கப் படும் முறை பற்றிய எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்டே விளக்கங்கள் அளிக்க முடியும் ஏனென்றால் முடிவுகள் பற்றிய முன்னோக்கங்கள் வித்தியாசமாக இருக்க வாய்ப்புகள் உண்டு,” என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கியை மீறுதல்

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தனது பெரும்பான்மையை உபயோகப்படுத்தி தேர்தல் பத்திரங்கள் மற்றும் தெளிவற்ற அரசியல் கட்சிகளுக்குக் கொடை என்னும் முறையையும் சட்டமயமாக்கிய பிறகே மோடி அரசாங்கம் இந்த பத்திரங்களின் செயல் முறையைப்பற்றி தங்களுக்குள் ஆராய ஆரம்பித்தன.

நிதி அமைச்சகத்தின் முக்கிய புள்ளிகள் இது சம்பந்தமான விவரங்களை நிரப்ப ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் தான் அரசாங்கம் ரிசர்வ் வங்கியின் கேள்விகளுக்கான விவரமான பதிலை தயாரிக்க முற்பட்டது.

அரசாங்கம் இந்த பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப் படும் நிதிகள் பற்றிய வெளிப்படைத்தன்மைக்கு இது உதவும் என்று தெரிவித்ததின் நம்பகத்தன்மை பற்றி ரிசர்வ் கேள்வி எழுப்பிய போது நிதி அமைச்சகம் தேர்தல் ஆணையம் இந்தத் திட்டத்தின் முக்கிய கொள்கை கொடையாளரின் அடையாளத்தின் ரகசியத்தன்மை காப்பு தான் என்று தெரிவித்தது.

ரிசர்வ் வங்கி நாட்டின் மத்திய வங்கியின் முக்கிய குறிக்கோளை இந்த பத்திரங்களின் வெளிப்பாடு பாதிக்கும் என்ற எச்சரித்த போது அதற்கு எதிரான வாதத்தைக் கொடுக்கக் கூட நிதி அமைச்சகம் முயலவில்லை.

பாராளுமன்றம் எல்லாவற்றிற்கும் மேலானது, அரசாங்கத்தின் எல்லா விஷயங்களிலும், ரிசர்வ் வங்கி சம்பந்தமான விவகாரங்களிலும் சட்டம் இயற்றும் உரிமை பெற்றது என்று முரட்டுத் தனமான பதிலை அளித்தது.

பாராளுமன்றத்தில் ஜெயிட்லி தேர்தல் பத்திரங்கள் பற்றி அறிவித்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 2017-ல் பொருளாதார விவகாரங்கள் காரியதரிசி தபன் ரேயும் அவரது அலுவலகமும் இந்த பத்திரங்கள் நடைமுறையில் எப்படி செயலாற்றும் என்பது பற்றி எழுதினார்கள்.

இந்தப் பத்திரங்கள் வாங்குபவர் மற்றும் பணம் பெறுபவர் பற்றிய விவரங்கள் அதை வெளியிடும் வங்கிகளால் ரகசியமாக வைக்கப் படும்.

ஆர்.டி.ஐ. எனப் படும் தகவல் அறியும் உரிமைக்கும் அப்பாற்படும் என்று தபன் ரேயின் அறிக்கை குறிப்பிட்டது. அரசியல் கட்சிகள் இந்த பத்திரங்களை அளித்தவர்கள் பற்றிய விவரங்களை பராமரிக்கும் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப் படுவார்கள் என்றும் இந்த அறிக்கைத் தெரிவித்தது.

ஆனால் பாராளுமன்றத்தில் ஜெயிட்லி அளித்த உரையின் முக்கிய தலைப்பு “தேர்தல் நிதி வழங்கலில் வெளிப்படைத் தன்மை என்பதாகும். இந்த சீர்திருத்தம் அரசியல் நிதி வழங்கலில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடமை கொண்டு வருவதோடு எதிர் காலத்தில் கருப்புப் பணம் உருவாவதையும் தடுக்கும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் பொதுவில் கொடையாளிகளின் அடையாளமின்மை பற்றி அளித்த வாக்குறிதிக்கு எதிராக, பத்திரங்கள் வாங்குவர்கள் பற்றிய விவரங்கள் பாங்குகளில் கிடைக்கும் எனவும் அமலாக்கத் துறையினருக்குத் தேவைப் படும் போது பெறப்படும் எனவும் இந்தக் குறிப்புத் தெரிவித்தது. அதாவது அரசாங்கம் மட்டுமே இது சம்பந்தமான விவரங்களை அறிய முடியும் என்பதே இதன் பொருள்.

இந்த தேர்தல் பத்திரங்கள் செயலாற்றும் முறை பற்றி நிதி அமைச்சக முடிவெடுத்த பிறகு, ஜெயிட்லியின் வழிகாட்டுதல் படி நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள், தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ வங்கிகளுக்கிடையில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் பங்கேற்றார்கள் ஆனால் ரிசர்வ் வங்கி பங்கேற்கவில்லை.

2017, ஜூலை 28 அன்று ரிசர்வ் வங்கி உதவி ஆளுநர் பி.பி. கனுங்கொ, தபன் ரேயிடமிருந்து பொறுப்பை மாற்றி எடுத்துக் கொண்டிருந்த, அப்போதைய பொருளாதார விவகார காரியதரிசி எஸ்.சி. கார்க் அவர்களை தனியாக சந்தித்தார்.

அதே நாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் நிதி அமைச்சர் ஜெயிட்லியை சந்தித்து தேர்தல் பத்திரங்கள் அமைப்பு பற்றி விவாதித்ததாக நிதி அமைச்சகத்தின் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

இந்த சந்திப்பிற்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி இந்தத் திட்டத்தின் செயல் முறையில் உள்ள குறைபாடுகள் பற்றி நிதி அமைச்சகத்துக்கு மறுபடியும் எழுதியது.

விரும்பத் தகாத நடவடிக்கைகளுக்குத் துணை போகக் கூடிய தன்மை இந்த பத்திரங்களில் இயல்பாக இடம் பெற்றிருப்பதாக கனுங்கோ குறிப்பிட்டிருந்தார்.

உலக அளவில், சமீபத்தில் தாங்கிப் பத்திரங்கள், பேரர் பாண்ட்ஸ் வெளியிடப் பட்டதற்கான முன்னுதாரணம் காணப் படவில்லையென்றுன் குறிப்பிட்டிருந்தார்.

தன் தோல்வியை ஒப்புக் கொள்ளும் விதமாக பண மாற்றம் மற்றும் மோசடி விஷயத்தில் இந்தத் திட்டத்தின் பங்கைக் குறைக்கும் கடைசி முயற்சியை எடுத்தது.

அதன் படி “இந்தியா இந்தப் பத்திரங்களை இடைநிலை அடிப்படையில் வெளியிடலாம்” என்று குறிப்பிட்டது.

இவற்றைத் தவறாக கையாளுவதை தடுக்க ஒரு எல்லை வகுத்தது. இந்த பத்திரங்கள் 15 நாட்களுக்கு மட்டுமே மதிப்புள்ளதாக கருதப்படலாம்.

“உங்கள் வாடிக்கையாளர்களை அறியுங்கள்” எனப்படும் “கேவைசி” (KYC) முறைப்படி சரிபார்க்கப்பட்ட கணக்குகளை கொண்டவர்கள் மட்டுமே இவற்றை வாங்க அனுமதிக்கப்படலாம், மற்றும் இவை ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலகத்தின் மூலம் மட்டும் ஆண்டுக்கு இரு முறை மட்டுமே அதுவும் குறுகிய காலத்துக்கு மட்டுமே வழங்கப்படலாம்” என்ற குறிப்புகளையும் கொடுத்தது.

முடிவாக ரிசர்வ் வங்கி ஒரு ஆண்டில் சராசரியாக வழங்கப்படும் பத்திரங்களின் மதிப்பிற்கும் எல்லை வகுக்க விரும்பியது.

பொருளாதார விவகாரங்களின் காரியதரிசி கார்க் நிதி அமைச்சகத்துக்கான தனது குறிப்பில், “ரிசர்வ் வங்கி தேர்தல் பத்திரங்களின் நன்மைகள் பற்றி பாராட்டுவதோடு பொருளாதார விவகாரங்களின் இலாகாவோடு ஒத்துப் போகிறது. அதனால் இந்தப் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே என்ற ரிசர்வ் வங்கியின் ஆலோசனையை நாங்கள் ஏற்க முடியும்” என்று ஒரு குறிப்பு அனுப்பினார்.

ஒரு அநாமதேயக் குறிப்பு

அரசாங்கம் ரிசர்வ் வங்கியின் ஆலோசனைகளில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அது வழக்கத்திற்கு மாறான இடங்களிலிருந்து ஆலோசனை பெற்று வந்ததாக தோன்றுகிறது.

தேர்தல் பத்திரங்கள் அமைப்பு பற்றிய முன் குறிப்புகளின் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த ஒரு பதிவு கிடைத்துள்ளது.

முகவரி அச்சிடப்படாத, தேதியில்லாத, கையெழுத்திடப்படாத, ஒரு சாதாரண காகிதத்தில் பதிவு செய்யப்பட்ட குறிப்பு கிடைத்துள்ளது.

ஒரு மத்திய அரசில் பணியாற்றுபவர் மற்றும் ஓர் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் இதை காட்டினோம். சாதாரணமாக அதிகாரிகள் உபயோகிக்கும் மொழித்தரத்தில் அவை இல்லையென்று அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

அந்தக் குறிப்பின் படி, ”தேர்தல் பத்திரங்களை எவ்வாறு கையாள்வது? தாங்கிப் பத்திரங்களில் அதனால் பயன் பெறும் நபரின் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. அதன் உரிமை அதை வைத்துக் கொண்டிருக்கும் நபருடையது. இவை கை மாற்றப் படுவது பற்றிய எந்த ஆதாரமும் இருப்பதில்லை.”

தேர்தல் பத்திரங்கள்: மோடி அரசாங்கம் ரிசர்வ் வங்கியை நிராகரித்தது
தேர்தல் பத்திரங்கள்: மோடி அரசாங்கம் ரிசர்வ் வங்கியை நிராகரித்தது
தேர்தல் பத்திரங்கள்: மோடி அரசாங்கம் ரிசர்வ் வங்கியை நிராகரித்தது

இந்தக் குறிப்பு இரண்டு விதமான பத்திரங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. ஒன்று நேரடியாக வழங்கப்படும் ரூபாய் 2000 மதிப்பிலான பத்திரங்கள்.

இவை ஆபத்தானவை. எனவே அதற்கு மேலான மதிப்புள்ள டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட, தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பொரேஷன் மூலம் வழங்கப்படக் கூடிய பத்திரங்கள். இவையும் ஆபத்தானவையே என்றும் இந்த குறிப்பு ஒப்புக் கொள்கிறது.

இந்தக் குறிப்புகள் அரசாங்கத்திற்கு வெளியில் உள்ளவர்களால் எழுதப்பட்டு கொடுக்கப்பட்ட கருத்துக் குறிப்பாகத்தோன்றுவதாக சொல்லப் படுகிறது.

முடிவாக அரசு இதை கைவிட்டு இப்போதுள்ள திட்டத்தை அமல் படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

(மொழிபெயர்ப்பு: சாந்தி பாலு)

(இந்த ரிப்போர்ட் முதலில் ஹஃப் போஸ்ட்-ல் வெளியானது.

லிங்: https://www.huffingtonpost.in/entry/rbi-warned-electoral-bonds-arun-jaitley-black-money-modi-government_in_5dcbde68e4b0d43931ccd200?utm_hp_ref=in-homepage)

The Lede
www.thelede.in