தேர்தல் பத்திரங்கள்: 3 ஆம் பாகம்
Governance

தேர்தல் பத்திரங்கள்: 3 ஆம் பாகம்

முக்கியமான மாநிலங்கள் தேர்தல்களுக்கு முன்பு, தன்னுடைய விதிகளை மீறி சிறப்பு தேர்தல் பத்திரங்கள் விற்க நிதி அமைச்சகத்துக்கு ஆணை

Nitin Sethi

Nitin Sethi

ஜனவரி 2, 2018 ல் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா பார்ட்டி அரசு சர்ச்சைக்குரிய, தேர்தல் பத்திரங்கள் சம்பந்தமான சட்ட விதிகளை வெளியிட்டது, உடனேயே பிரதம மந்திரி மோடியின் அலுவலகம் சட்டத்திற்கு புறம்பான விற்பனைக்காக இந்த விதிகளை மீறவும் ஆணையிட்டது. இது முதலில் விதி விலக்கு என்ற முறையில் நடந்தாலும் பிறகு இதுவே வழக்கமாக ஆக்கப் பட்டது.

ரிசர்வ் வங்கி, இந்தியாவின் எதிர்க் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தீவிர ஆட்சேபணைகளுக்கு எதிராக நடைமுறைப் படுத்தப் பட்ட இந்திய தேர்தல் பத்திரங்கள் பெரிய நிறுவனங்களுக்கும் மற்றவர்களுக்கும் ரகசியமான வழியில் அரசியல் கட்சிகளுக்கு கொடையளிக்க வழி செய்தது. அதனால் இந்திய தேர்தலின் போது கொடையாளர்களின் செல்வாக்கு உயர வழி செய்தது. தவிர இந்திய அரசியலில் வெளி நாட்டுப் பணத்தின் வருகைக்கு கதவுகளையும் திறந்து விட்டது.

2017ல் ஜெயிட்லியின் பட்ஜெட் உரையில் இந்தப் பத்திரங்கள் அறிமுகப் படுத்தப் பட்டன. இத்திட்டம் கொடையாளிகள் பற்றிய தகவல்கள் மறைப்புக்கு உத்தரவாதம் அளித்ததுடன், இதன் கீழ் கொடையாளி அந்த நிதியின் மூலாதாரத்தை வெளிப் படுத்தத் தேவையில்லை, அரசியல் கட்சிகள் யாரிடமிருந்து அந்த நிதி பெறப் பட்டதென்ற விவரங்கள் கொடுக்கத் தேவையில்லை, ஆனால் அதே நேரம் அமலாக்கப் பட்ட மாற்றம் மூலம் பெரு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் கொடைக்கான வரம்பு நீக்கப் பட்டதன் மூலம் அவை தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு தங்கள் விருப்பம் போல் நிதி அனுப்பலாம்.

அதன் முடிவாக ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை, அதாவது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, மற்றும் அக்டோபரில் பத்து நாட்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி இந்தப் பத்திரங்களை விற்பனை செய்யும். தவிர தேர்தல் ஆண்டின் போது அதிகமாக 30 நாட்களுக்கு இவை விற்பனை செய்யப் படும் என்பது சட்ட ரீதியாக அனுமதிக்கப் பட்டது.

வெளிப் படைத் தன்மை ஆர்வலர் பாத்ராவால் பெறப் பட்ட, இதுவரை வெளியிடப் படாத ஆவணங்கள் எப்படி இரண்டு முறை, மாநில தேர்தல்கள் நேரத்தில் இந்தத் திட்டத்தின் சட்ட விதிகளை மீறிய விற்பனையை அனுமதிக்கும் படி பிரதம மந்திரியின் அலுவலகம் நிதி அமைச்சகத்திற்கு ஆணையிட்டது என்று வெளிப் படுத்துகின்றன.

கர்நாடகா, சட்டீஸ்கர், மத்திய பிரதேஷ், மிஸோரம், தெலங்கானா, ராஜஸ்தான் மாநில தேர்தல்கள் மோடி அரசாங்கத்தின் முதல் ஆட்சிக் காலம் முடிவதற்கு முன் இறுதியாக நடந்த மாநிலத் தேர்தல்கள். இவற்றின் முடிவுகள் 2019 பொதுத் தேர்தலுக்கு கட்டியம் கூறுபவையாக அமையும் என எதிர் பார்க்கப் பட்டது.

பிஜேபி கட்சியின் ஆண்டு அறிக்கையிலிருந்து முதல் சந்தர்ப்பத்தில் பெறப் பட்ட நன் கொடை நிதியில் 95% பிஜேபிக்கு சென்றதாக தெரிகிறது. 2018- 19 சட்ட சபைத் தேர்தலில் பிஜேபியும் மற்ற கட்சிகளும் இந்த பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றார்கள் என்பதற்கான புள்ளி விவரம் இது வரை கிடைக்கவில்லை.

அதிகப் படியான நாட்களுக்கு இவற்றின் விற்பனையையும் , அதன் மூலம் அரசியல் நிதி நன்கொடையையும் அனுமதிக்கும் படி பிரதம மந்திரியின் அலுவலகத்திலிருந்து வந்த அறிவுறுத்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால் குறுகிய காலம் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்பது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகளை கட்டுப் படுத்தும் நோக்கம் கொண்டது. ரிசர்வ் வங்கி இந்தப் பத்திரங்களின் விற்பனைக்கு ஆண்டுக்கு இருமுறை, அதுவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே, என்று ஒரு எல்லை விதிக்க விரும்பியது.

பிரதம மந்திரியின் அலுவலகத்தின் குறிப்பாணை

தேர்தல் பத்திர விற்பனை விதிகள் அரசுக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே மீறப் பட்டன. அரசு அறிவித்தபடி இவற்றின் விற்பனை பாரத ஸ்டேட் வங்கியால் 2018 ஏப்ரல் மாதம் தொடங்கப் பட வேண்டும் . ஆனால் 2018 மார்ச் மாத்த்திலேயே முதல் சுற்று திறக்கப் பட்டது. இந்த சுற்றில் ரூபாய் 222 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் வாங்கப் பட்டு வழங்கப் பட்டன. 2018 ஏப்ரலில் அடுத்த சுற்று திறக்கப் பட்டு ரூபாய் 114.90 கோடி மதிப்பிலான பத்திரங்கள் வாங்கப் பட்டு வழங்கப் பட்டன. ஆனாலும் அரசு இவற்றால் திருப்தியடையவில்லை. மே மாதம் நடத்தப் பட இருந்த கர்நாடகா தேர்தலுக்காக அதிகப் படியாக, விசேஷமாக பத்து நாட்களுக்கு பத்திர விற்பனையை திறக்கும் படி பிரதம மந்திரியின் அலுவலகம் நிதி அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது. வெளிப் படையாக இந்த நிகழ்வை பிரதம மந்திரியின் அலுவலகம் கர்நாடகா தேர்தலுக்கு சம்பந்தப் படுத்தவில்லையென்றாலும் நிதி அமைச்சகம் அதை புரிந்து கொண்டது.

இந்த நடவடிக்கை மாநில தேர்தலுக்கு தொடர்புடையது என்று உணர்ந்த ஒரு அதிகாரி இது சட்டப் படி அனுமதிக்கப் படாதது என்று குறிப்பிட்டார்.

“ஜனவரி 2, 2018 ல் வெளியிடப் பட்ட தேர்தல் பேரர் பத்திரங்கள் பற்றிய அறிவிக்கையின் பாரா 8 (2) பாராளுமன்ற மக்களவை தேர்தல் பற்றியதாகும்,” என தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை கையாண்டு வந்த பொருளாதார விவகாரங்கள் துறை உதவி இயக்குநர் விஜயகுமார் இது பற்றி தனது துறை சார்ந்த குறிப்பில் ஏப்ரல் 3, 2018 அன்று கூறி, “கூடுதல் தேர்தல் பத்திரங்கள் மாநில சட்டசபை தேர்தல் தொடபாக வெளியிடப் பட முடியாது.” எனப் பொருளாகும் என்று பதிவு செய்ததுடன், அவர் விதிகளில் தான் பிரச்சினை, பிரதமர்அலுவலகம் கூறியதில் அல்ல, எனவே சட்டத்தை மாற்றலாம் என்றும் ஆலோசனை சொன்னார்.

தேர்தல் பத்திரங்கள் சம்பந்தமான வரைவு அதை வடிவமைத்தவரின் எண்ணத்தை பிரதி பலிக்கவில்லை. பத்திரங்கள் வெளியீடு மக்களவை தேர்தலுக்கும் மாநில சட்டப் பேரவை தேர்தல்களுக்கும் பொதுவானது. எனவே இதில் விட்டுப் போன விவரத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அவரது ஆலோசனை பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலர் கார்க் அவர்களால் இது தவறான கணிப்பு என்று மொத்தமாக நிராகரிக்கப் பட்டது.

சிறப்பு வெளியீடு மக்களவைக்கு மட்டுமானது. மாநில தேர்தல்களுக்கும் சிறப்பு வெளியீடு அனுமதிக்கப் பட்டால் ஒரே ஆண்டில் பல முறை சிறப்பு வெளியீடு அனுமதிக்கப் பட வேண்டி வரலாம். எனவே திருத்தங்களுக்கு அவசியம் இல்லையென்று கார்க் பதில் எழுதினார்.

தேர்தல் பத்திரங்கள்: 3 ஆம் பாகம்

பிரதம மந்திரி அலுவலகம் விரும்பியதற்கும் சட்டம் குறிப்பிடுவதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்க எண்ணி ஒரு வாரத்திற்கு பிறகு, ஏப்ரல் 11, 2018 அன்று உதவி இயக்குநர் குமார் தனது மேலதிகாரிகளுக்கு எழுதினார். அதில் “பிரதமர் அலுவலகம் 10 நாட்களுக்கு சிறப்பு விற்பனை விரும்புகிறது. ஆனால் ஜனவரி 2, 2018 தேர்தல் பத்திர திட்டத்தின் பாரா 8 (2) வில் உள்ள குறிப்புப் படி மக்களைக்கான பொது தேர்தல் ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கு பத்திர வெளியீடு அரசால் அனுமதிக்கப் படலாம்.

மக்களவை தேர்தல் வெகு நாட்களுக்குப் பிறகே இருக்கும் இந்த நிலையில் ஒரு சிறப்பு வெளியீடு தேர்தல் பத்திரங்கள் அறிவிக்கையில் கூறியிருப்பதற்கு ஒத்ததாக இராது என்றும் குறிப்பிட்டார். இது தான் முதல் முறையாக பிரதம மந்திரியின் அலுவலகத்திலிருந்து தான் குறிப்புகள் வந்தன என்று அதிகாரிகள் எழுத்தில் பதிவு செய்தது.

தேர்தல் பத்திரங்கள்: 3 ஆம் பாகம்

பிரதம மந்திரி அலுவலகத்தின் பெயர் குறிப்பிடப் பட்ட உடன் பொருளாதார விவகார துறை காரியதரிசி தனது நிலையை உடனடியாக மாற்றிக் கொண்டு ஒத்துழைத்தார்.

ஏப்ரல் 11 அன்றே அவர் நிதி அமைச்சர் ஜெயிட்லிக்கு அனுப்பிய குறிப்பில் தேர்தல் பத்திரங்கள் பேரர் பத்திரங்கள் என்பதால் அவற்றை பண நோட்டுகள் போல் உபயோகிப்பதை தவிர்க்க பாராளுமன்ற, மக்களவைத் தேர்தல் இல்லாத ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் நிதி பங்களிப்பு ஒரு ஆண்டில் நான்கு முறை மட்டுமே அனுமதிக்கப் படுவதே பாதுகாப்பானதும். போதுமானதும் ஆகும்.

இது முன்னே குறிப்பிட்ட படி ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கைக்குப் பிறகு செய்யப் பட்ட கட்டுப் பாடாகும்.

ஆனாலும் நான்கு மாதங்களுக்கு முன் ஜனவரி 2018 ல் அரசு ஒப்புதல் அளித்து, அறிவித்த விதி முறைகளை நிதி அமைச்சர் ஜெயிட்லி மாற்றலாம்/ உடைக்கலாம். இப்போதைய தேவை கருதி , ஒரு விதி விலக்காக மே 1-10, 2018ல் ஒரு கூடுதல் வெளியீடு அனுமதிக்கலாம் என்றும் கார்க் ஆலோசனை அளித்தார். இப்போதைய தேவை என்ன என்று அவர் விளக்கவில்லை , ஆனாலும் ஜெயிட்லி அந்த விதி விலக்கை அனுமதித்தார்.

தேர்தல் பத்திரங்கள்: 3 ஆம் பாகம்

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு முந்தைய, சட்டத்திற்கு எதிராக, பிரதம மந்திரியின் அலுவலகத்தின் அறிவுறுத்தல் படி அனுமதிக்கப் பட்ட இந்தத் தேர்தல் பத்திர விற்பனையை நிதி அமைச்சகம் தனது பதிவேடுகளில் சிறப்பு விதி விலக்கு என்று குறிப்பிட்டது.

ஆனால் 2018 முடிவில், விமர்சனத்துக்குள்ளாகும் வகையில் தொடர்ந்து பல சட்ட சபை தேர்தல்கள் திட்டமிடப் பட்டன. இதனால் தேர்தல் பத்திரங்களுக்கு நிர்ணயிக்கப் பட்ட சட்ட வரை முறைகளை மீறுவது என்பது பிஜேபி அரசுக்கு வழக்கமாக ஆகி விட்டது.

மின்னஞ்சலில் நிதி அமைச்சகம் வரும் ஆண்டின் பட்ஜெட் தயாரிப்பதில் ஈடுபட்டிருப்பதால் குறிப்பிடப் பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க இயலவில்லை என்று குறிப்பிட்ட்து. ஆனால் எல்லா முடிவுகளும் நல்லெண்ணத்தோடு தான் எடுக்கப் பட்டன என்றும் குறிப்பிடபட்டது.

“மின்னஞ்சலில் எழுப்பப்பட்ட எல்லா கேள்விகளும், அந்த நேரத்தில் இருந்த தகுதியுள்ள அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றியவை. அரசு துறைகளில் எல்லா முடிவுகளும் நல்லெண்ணம் மற்றும் பொது நலன் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. அவற்றின் மீது வெவ்வேறு கோணங்களில் மேல்விளக்கங்கள் வெவ்வேறு விதமாக அமையக் கூடும். எனவே தீர்மானம் எடுக்கப்பட்ட பொழுது கருத்தில் கொள்ளப் பட்ட எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டே விளக்கம் அளிக்க இயலும்” என்று நிதி அமைச்சகம் கூறியது.

பிரதம மந்திரியின் அலுவலகம் கேள்விகளுக்கு பதிலளிக்க முன்வரவில்லை.

மாநில தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி

சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலத் தேர்தல்கள் 2018 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தத் திட்டமிட்ட நிலையில் அதே உதவி இயக்குநர் விஜய குமார், அக்டோபர் 22, 2018 அன்று தனது மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பிய திட்டத்தில் சட்டசபைத் தேர்தல்களுக்கு முன், நவம்பர் 2018 ல் மற்றுமொரு தேர்தல் பத்திர விற்பனை பற்றிக் குறிப்பிட்டார். இந்த முறை இதற்கான அறிவுறுத்தல்கள் யாரிடமிருந்து வந்தன என்று குறிப்பிடவில்லை, ஆனால் இந்த அறிவுறுத்தல்களுக்கான காரணத்தை தெளிவாகக் குறிப்பிட்டார்.

பிஜேபி அரசின் இந்த சட்ட விரோதமான, மே மாத சிறப்பு பத்திர வெளியீட்டை “எதிர்காலத்தில் பின்பற்றப் பட வேண்டிய முன்னுதாரணமாகும்” என்று தனது குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டார்.

“நிதி அமைச்சரின் ஒப்புதலோடு அரசால் மே 1-10, 2018 ல் கர்நாடக மாநில தேர்தலின் போது வெளியிடப் பட்ட சிறப்பு தேர்தல் பத்திர விற்பனையின் ஒப்பீட்டின் படி வருகிற ஐந்து மாநில தேர்தல்களைக் கருத்தில் கொண்டும் பெறப்பட்ட அறிவுறுத்தல்கள் படியும் அதிகப் படியாக பத்து நாட்களுக்கு பத்திர வெளிப்பாடு திட்டமிடப் படுகிறது”. என்று குமார் அவர்களின் அக்டோபர் 22, 2018 குறிப்பு சொல்கிறது.

தேர்தல் பத்திரங்கள்: 3 ஆம் பாகம்

கார்க் மற்றும் ஜெயிட்லி இரண்டு பேரும் சிறிதும் தயக்கமின்றி இதில் கையொப்பமிட்டார்கள். ரூபாய் 184 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் கொடையாளர்களால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடமிருந்து வாங்கப் பட்டு அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்கப் பட்டது.

பிரதம மந்திரி மோதி அலுவலகத்தின் உத்தரவின் படி ஒரே ஒரு முறையாக, ஒழுங்கு மீறுதல் முறையில் 2018 மே மாதம் அவரது அரசால் ஆரம்பிக்கப் பட்ட செயல்பாடு வழக்கமான பயிற்சி என்றாகி விட்டது. 2019 மே மாத்திற்குள் ரூபாய் 6000 மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்கப் பட்டு ரகசியமாக அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ளன. இதன் முதல் பகுதி விற்பனையில் தெரிந்து கொண்ட வரையில் பிஜேபி அரசின் பங்கு இதில் மிக அதிகம்.

(மொழிபெயர்ப்பு: சாந்தி பாலு)

(இந்த ரிப்போர்ட் முதலில் ஹஃப் போஸ்ட்-ல் வெளியானது. லிங் இங்கே.)

Read Parts 1 and 2 of the series here.

The Lede
www.thelede.in