தவறாக பொருள்படும் போஸ்டர்

தவறாக பொருள்படும் போஸ்டர்

Home Quarantine ல் இருப்பவர்களின் மீது கோபம் கொள்ளும் கிராம மக்கள்

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசும் சுகாதாரத்துறையும் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாரட்டப்பட வேண்டியவையே.

தமிழகம் முழுவதும் Home Quarantine இல் கிட்டதட்ட 13 ஆயிரம் பேர் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்தி வீட்டிற்குள் உள்ளனர்.

இவர்களில் சிலர் முறையாக தனிமைப்படுத்துதலை கடைபிடக்காமல் வெளியில் வருவதை தடுக்கும் வகையில் அரசு அவர்களின் வீடுகளில் போஸ்டர்களை ஒட்டி கண்காணிப்பில் வைத்துள்ளது.

இதற்காக

"கொரோனா தொற்று

உள்ளே நுழையாதே

தனிமைப்படுத்தபட்ட வீடு"

என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டியை ஒட்டியுள்ளது.

இது எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாமல் முன்செச்சரிக்கையாக Home Quarantine-ல் உள்ளவர்களை "கொரோனா நோயாளிகள்" என்ற அர்த்தத்தை தரும் வகையில் உள்ளது.

தனிமைப்படுத்தபட்ட வீட்டின் பக்கத்து வீட்டினரும், கிராம மக்களும் அச்சப்படும் சூழல் எழுந்துள்ளது.

கிராம மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தனிமைப்படுத்துவது என்பது சாத்தியமற்றது.

உதாரணமாக, நான் கடந்த 22 ஆம் தேதி வியட்நாமில் இருந்து சென்னை திரும்பினேன். சென்னை விமான நிலையத்திலேயே பரிசோதனைகள் செய்து எந்தவித அறிகுறிகளும் இல்லாததால் என்னை Home Quarantine-க்கு உட்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செட்டிபுதூர் என்ற கிராமத்தில் உள்ள எங்கள் வீட்டில் நான், என் நலன் மற்றும் சமூக நலன் கருதி கடந்த 22 ஆம் தேதி முதல் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.

கடந்த 23 ஆம் தேதி மருத்துவ குழுவினர் வந்து பார்த்துவிட்டு அறிகுறிகள் இல்லை என சொல்லிவிட்டுச் சென்றனர்.

மருத்துவ குழுவின் வருகையே எங்கள் கிராம மக்களை அச்சமடையச் செய்தது. கிராம மக்களில் சிலர் எனக்கு கொரோனா இருப்பதாக வதந்திகளை பரப்பி மக்களை மேலும் அச்சமூட்டினர்.

இதனால் என் வீட்டிலிருப்வர்களையும் வெளியே செல்ல வேண்டாம் என சொல்லிவிட்டு, பக்கத்து வீட்டினரின் உதவியோடு பால், காய்கரி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுவந்தோம்.

ஆனால் தற்போது எங்கள் வீட்டில் ஒட்டப்பட்டுள்ள தவறான பொருள்படும் போஸ்டரின் காரணமாக பக்கத்து வீட்டினரும் உதவ தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள் மற்றும் பக்கத்து வீட்டினரின் உதவியில்லாமல் 21 நாட்கள் ஊரடங்கை சமாளிப்பது என்பது இயலாத காரியம்.

எனவே தவறான பொருள்படும் போஸ்டரின் வாசகங்களை நீக்கி "தனிமைப்படுத்தப்பட்ட வீடு" என்ற வாசகமுடைய போஸ்டரை ஒட்டி எங்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும்.

AD
No stories found.
The Lede
www.thelede.in