ஜல்லிக்கட்டுக் காளைகளை
அடக்கினவன் தமிழன் - மனிதன்
கொரோனா என்ற காளை - தன்
புரோடீன் கொம்புகளால் தாக்க ,
மனிதன் தடுமாறினான்.
கண்களுக்குத் தெரியாத
கொரோனாவை எப்படி அடக்குவது -
என்று திகைத்தான்.
கைகளில் இருக்குமோ என்ற சந்தேகத்துடன்
மீண்டும், மீண்டும்
சுத்தப்படுத்தினான்.
காணவில்லை.
வீட்டுக்குள் வந்துவிடாதபடி தன்
அன்புக் குடும்பத்தைத்
தனிமைப் படுத்தினான்.
கொரோனா ஒரு பிரளயம் போல் தாக்கியது,
ஜாதி,மத பேதமின்றி,
பணக்காரன், ஏழை என்று பாராமல்
திணற வைத்து
சுவாசத்தை நிறுத்தி
கொன்று குவித்தது.
என்ன செய்வேன்! என்றான் மனிதன்.
Zoom என்று கூடினாய்...
Chat செய்தாய் ... புரிந்தது...
சாலை, வீடு, கிராமம், நாடு
ஒன்று விடாமல் ...
மனித நடமாட்டம் இல்லாத
ஒரு தோற்றத்தை உருவாக்கினான்.
தலை தெறிக்க ஓடும் கொரோனாவிற்கு
மனிதனை எங்கும் காணவில்லை.
நாட்கள் கழிந்தன...
வேகம் குறைந்து, கால்கள் தடுமாற,
கொரோனாவின் விஷ சுவாசம்
கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ..
காத்திருப்பேன் என்றான் மனிதன்.
உன் வீரியம் குறைந்தவுடன்,
சிகப்புத் துணியால் உன் கண்களை மூடி,
கொம்புகளை உடைப்பேன், காலால் மிதித்து,
விஜய பேரிகை முழங்குவேன்! !
விழித்திருப்பேன், வாழ்ந்திடுவோம்...!